நெருக்கடிக்குள்ளாகியுள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காகவே ஜனாதிபதி அரசொன்றை உருவாக்கியுள்ளதுடன், அதற்கிணங்கவே அரசு செயற்படுகின்றது என சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
எனினும் தற்போதைய நிலையை பயன்படுத்தி சிலர் நாடாளுமன்றத்தை அராஜக நிலைக்கு கொண்டுசெல்ல முற்படுகின்றனர் என்றும் அதற்கு இடமளிக்க முடியாது என்றும் அமைச்சர் தினேஷ் குறிப்பிட்டார்.
தெளிவு இல்லாத சிலர் அறியாமலே அந்த பாரிய குற்றச்செயலுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், பிரதமர் பதவி குறித்து தற்போது பேசி எந்தப் பயனும் கிடையாது என்றும் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment