20220525 153447 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போராட்டத்தில் குதிப்போம்! – யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள் எச்சரிக்கை

Share

நாளைக்கு கரையோரப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெயை பெற வசதி ஏற்படுத்த வேண்டும். அது வரத் தவறினால் சங்கங்கள் போராட்டத்தை ஆரம்பிக்கும். ஆரம்பித்தால் அதனை அடக்க முடியாதென யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன செயலாளர் நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மண்ணெண்ணெய் பல நாட்களாக வடக்கிற்கு வரவில்லை. தென்னிலங்கையில் சகல இடங்களுக்கும் எரிபொருள் போய்க்கொண்டிருக்கின்றது.

வடபகுதிக்கு மாத்திரமே மண்ணெண்ணெயும் எரிபொருளும் தடைபட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. தமிழ் அரசியல்வாதிகளும் கண்ணை மூடிக் கொண்டு இருக்கின்றார்கள். இதனை நாம் பலதடவை சுட்டிக் காட்டியுள்ளோம். இதனால் கடற்றொழிலாளர் சங்கங்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக கொந்தளித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

நாளைக்கு மண்ணெண்ணெய் வரவில்லை என்றால் நீங்கள் என்னவென்றாலும் செய்யுங்கள் என்று நாங்கள் கூறியுள்ளோம். தமிழ் அரசியல்வாதிகளின் அலுவலகத்தையோ மாவட்ட செயலகத்தையோ ஆளுநர் அலுவலகத்தையோ அவர்கள் முற்றுகையிட தயாராகவுள்ளனர்.

நாங்கள் இதனை பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. கடற்றொழில் குடும்பங்கள் பட்டினிச் சாவை எதிர் கொண்டு உள்ளன. தயவுசெய்து இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனத்திலெடுத்து நாளை கரையோரப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெயை பெற வசதி ஏற்படுத்த வேண்டும்.

அது வரத் தவறினால் சங்கங்கள் போராட்டத்தை ஆரம்பிக்கும். ஆரம்பித்தால் அதனை அடக்க முடியாது. தயவுசெய்து இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு கரையோரப் பிரதேச கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...