” இது சர்வக்கட்சி அரசு கிடையாது. எனவே, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது அரசாங்கத்தில் இணையாது. அமைச்சு பதவிகளை பொறுப்பேற்காது.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சர்வக்கட்சி அரசை நிறுவுமாறு நாம் கோரிக்கை விடுத்திருந்தோம். எனினும், அமையப்பெற்றுள்ள அரசானது சர்வக்கட்சி அரசு அல்ல. உறுப்பினர்களை வளைத்துபோட்டு அமைக்கப்பட்ட தொங்கு நிலை அரசாகும். இவ்வாறான அரச கட்டமைப்பில் இணைய மாட்டோம்.
எனினும், நாட்டு மக்களின் நலன்கருதி, வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு வழங்கப்படும். முறையாக சர்வக்கட்சி அரசு உருவாக்கப்பட்டால், அரசில் இணைந்து பங்களிப்பு வழங்கப்படும். அத்துடன், எதிரணியில் இருந்து 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு சுதந்திரக்கட்சி ஆதரவு வழங்கும்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment