இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்போருக்கு சட்ட நடவடிக்கை !

Rice 1 1
Share

யாழ் மாவட்டத்தில் அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் பொருட்களுக்கான விலை அதிகரித்த நிலைமை காணப்படுகின்றது. பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை மிகவும் நியாயமான விலையில் வழங்க வேண்டும்.

அதே நேரத்தில் தற்போது அரசாங்கம் அரிசிக்குரிய கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயித்துள்ளது. அந்த நிர்ணயவிலைக்கு உட்பட்ட வகையில் பொருட்களினை விற்கவேண்டும். சில்லறை விற்பனையாளர்ளும் இந்த விடயத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டும். அதிக விலைக்கு அரிசியை விற்று பாவனையாளர்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கவேண்டாம்.

அதே நேரத்தில் அரசாங்கம் நிர்ணயித்த விலையானது நியாயமான விலையாக காணப்படுகின்றது. அதே நேரத்தில் எதிர்காலங்களில் யாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் ஊடாக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

யாழ். மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினரின் கண்காணிப்பின் மூலம் கட்டுப்பாடு விலையினை மீறி அரிசி விற்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம். எனவே பொதுமக்களுக்கு கஷ்டம் ஏற்படுத்தாதவாறு அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்க வேண்டாம் என யாழ்ப்பாண வர்த்தக சமூகத்தினரிடம் கேட்டுக்கொள்கின்றோம் – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...