இலங்கைசெய்திகள்

இந்தியாவிற்கு தப்பிச்சென்ற பாதாள உலகக்குழுவின் தலைவர்!

rtjy 206 scaled
Share

இந்தியாவிற்கு தப்பிச்சென்ற பாதாள உலகக்குழுவின் தலைவர்!

பாதாள உலகக்குழுவின் பலம் வாய்ந்த தலைவராக கருதப்படும் கணேமுல்ல சஞ்சீவ மற்றும் கோத்தா அசங்க ஆகியோர் பாதுகாப்புப்படையினரால் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருவதாக புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இருவரையும் கைது செய்ய பொலிஸ் குழுக்கள் முற்பட்டபோது, ​​அவர்கள் 2018 ஆம் ஆண்டு படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச்சென்றிருந்தனர்.

இந்தியாவிற்கு தப்பிச்சென்ற கணேமுல்ல சஞ்சீவ தனது சகா கோட்டா அசங்கவுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல் மற்றும் கொலைகளை மேற்கொள்வதற்கு அவர்களின் ஆதரவாளர்களை வழிநடத்தியதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்திய பாதுகாப்புப்படையினர் இருவரையும் கைது செய்தததாக இதுவரை தகவல் கிடைக்கவில்லை என்று உளவுத்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

மேலும், சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருவதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....