சட்டத்தை மதிக்காத சாரதிகள்: எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை
இலங்கைகுற்றம்செய்திகள்

சட்டத்தை மதிக்காத சாரதிகள்: எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை

Share

சட்டத்தை மதிக்காத சாரதிகள்: எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை

சாரதிகள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது மற்றும் அளவுக்கு மிஞ்சிய பயணிகளை ஏற்றுவதுடன் சிலர் மத போதையில் வாகனம் செலுத்துவதை வீதிப்போக்குவரத்து பொலிஸார் முறையாக கண்காணிப்பு மேற்கொள்ளாத காரணத்தாலே மன்னம்பிட்டி விபத்து இடம்பெற்றுள்ளது.

எனவே சட்டத்தையும் வீதி ஒழுங்கு முறைகளையும் மதிக்காமல் செயற்படும் சாரதிகள் நடத்துனர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

மன்னம்பிட்டியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பாக இன்று (11.07.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டத்தை மதிக்காத வாகனச் சாரதிகளின் கவனயீனத்தினால் விபத்து நடந்து பல அப்பாவி உயிர்கள் தொடர்ச்சியாக காவு கொள்ளப்படுகின்றன.

இதன் காரணமாக போக்குவரத்துச் செய்யும் பிரயாணிகள் விபத்துக்களால் பலர் அங்கவீனமடைகின்றதுடன் பொருட்சேதம் மற்றும் உடமைகளுக்கு சேதங்கள் ஏற்படுகின்றது.

அன்றாட வாழ்வாதார தேவைப்பாட்டின் நிமித்தம் பிரயாணிகள் இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ளும் போது உயிரை கையில் பிடித்த நிலையில் அச்சத்துடனும், பதற்றத்துடனும் பிரயாணம் செய்கின்றார்கள்.

பல நூற்றுக்கணக்கான உயிர்கள் ஒருவரை நம்பியே பயணம் செய்வதால் பல உயிர்களை ஏற்றிச் செல்லும் சாரதி எவ்வளவு பொறுப்புடனும், அக்கறையுடனும், கன்னியமாகவும், தெளிவாகவும் பாதுகாவலனாகவும் செயற்பட வேண்டும்.

இம் மாவட்டத்தில் நேர்மையோடு பணியாற்றும் சட்டத்தை மதிக்கும் சாரதிகளும் நடத்துனர்களும் பலர் இருக்கின்ற வேளையில் ஒருசிலரின் செயற்பாடுகள் காரணமாக பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றது சரியாக கடமையாற்றும் சாரதிகளை நாம் மதிப்பதோடு, அவர்களை நாம் கௌரவப்படுத்துகின்றோம்.

இதற்கு மாறான முறையில் ஒப்படைக்கப்பட்ட பணியை துஸ்பிரயோகம் செய்யும் சாரதிகளையும், நடத்துனர்களையும் அவர்களது சட்டத்தையும் ஒழுங்காக மதிக்காது உதாசீனச் செய்கைகளை இட்டு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் அவர்களுக்கு எதிராக முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நியாயமான முறையில் நீதி வழங்கப்படவேண்டும்.

பயணம் மேற்கொள்ளும் பொது மக்களின் பயணம் இனியாவது பாதுகாப்பாக அமைய சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பதோடு சாரதிகள் பொறுப்புணர்வுடன் தம்மை நம்பி பயணிக்கும் மக்களை பாதுகாப்பாக தங்கள் இருப்பிடம் கொண்டு சேர்ப்பதற்கு பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.” என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...