வடக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 4 ஆயிரத்து 83 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் 106 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் வவுனியா மாவட்டத்தில் 45 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 43 பேரும் கிளிநொச்சி மாவடடத்தில் 9 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 பேரும் மன்னார் மாவட்டத்தில் ஒருவரும் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி வடக்கு மாகாணத்தில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 515 பேராக உயர்வடைந்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் நேற்று செப்ரெம்பர் 7ஆம் திகதி மாத்திரம் 569 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 246 பேரும் வவுனியாவில் 160 பேரும் கிளிநொச்சியில் 99 பேரும் முல்லைத்தீவில் 39 பேரும் மன்னாரில் 31 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் வடமாகாணத்தில் நேற்று 22 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தனர். அதன்படி வவுனியா மாவட்டத்தில் 16 பேரும் யாழ்ப்பாணத்தில் 5 பேரும் முல்லைத்தீவில் ஒருவருமே நேற்று உயிரிழந்தவர்களாவர்.
அந்நிலையில் வடக்கு மாகாணத்தில் நேற்றுவரை 30 ஆயிரத்து 912 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 474 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 635 பேரும் வவுனியா மாவட்டத்தில் 5 ஆயிரத்து 788 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 192 பேரும் மன்னார் மாவட்டத்தில் ஆயிரத்து 823 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment