image cc7ba7a30c
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முல்லையில் நில அபகரிப்பு!

Share

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக வயல் நிலங்களில், எவ்வித முன்னறிவிப்பு இன்றி அரச திணைக்களத்தை சேர்ந்த சிலரால் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டு அபகரிப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந் நிலையில் கொக்குத் தொடுவாய் கமக்கார அமைப்பினர், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை திங்கட்கிழமை (20) அழைத்து அங்குள்ள நிலைமைகளைக் காண்பித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொக்குத்தொடுவாய் – கோட்டக்கேணியிலிருந்து, அம்பட்டன் வாய்க்கால், தீமுந்தல், பணம்போட்டகேணி, நாயடிச்ச முறிப்பு, வெள்ளைக்கல்லடி, சிவந்தாமுறிப்பு, சூரியனாறுவரையான தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக வயல் நிலங்களில் அரச திணைக்களத்தைச் சார்ந்த சிலரால் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டு அபகரிப்பு முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை காணிகளுக்குரிய தமிழ் மக்களுக்கோ, கமக்கார அமைப்பினருக்கோ அறிவித்தல் வழங்கப்படாமலேயே குறித்த எல்லைக் கற்கள் நாட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறாக மக்களுக்கு அறிவித்தல் வழங்காமல் எல்லைக்கல் நாட்டும் செயற்பாடொன்று, ஏற்கெனவே கடந்த வருட இறுதிப் பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அப்போது இது தொடர்பில் உரிய அரச அதிகாரிகள் மற்றும், வெலி ஓயா பகுதி நிலஅளவைத் திணைக்களத்தினரோடு பேசி முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மற்றும், அப்பகுதித் தமிழ் மக்கள் அங்கு நாட்டப்பட்ட எல்லைக்கற்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுமிருந்தனர்.

அத்தோடு இனிமேல் இவ்வாறான எல்லைக்கல் நாட்டும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக இருந்தால் காணிகளுக்குரிய மக்கள், கமக்கார அமைப்பினர், மாவட்ட செயலாளலர் மற்றும், பிரதேச செயலாளர் ஆகியோருக்கு அறிவித்தல் வழங்கியே எல்லைக்கல் நாட்டப்படுமென, எல்லைக்கல் நாட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

எனினும் தற்போது மீண்டும் எவ்வித முன்னறிவிப்புமின்றி தமிழ் மக்களுக்குரிய வயல் காணிகளில் எல்லைக் கற்கள் நாட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பினை ஏற்று குறித்த பகுதிகளுக்கு நேரடியாகச் சென்ற முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், இது தொடர்பில் உரியவர்களின் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும் தெரிவித்திருந்தார்

மேலும் குறித்த செயற்பாடுதொடர்பில் மாவட்ட செயலாளர் மற்றும், பிரதேச செயலாளர் ஆகியோரது கவனத்துக்கும் கொண்டுவர உள்ளதாகவும் கொக்குத் தொடுவாய் பகுதி தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...