tamilni 288 scaled
இலங்கைசெய்திகள்

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களை கொலை செய்து கொக்குத்தொடுவாயில் புதைத்துள்னர்

Share

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களை கொலை செய்து கொக்குத்தொடுவாயில் புதைத்துள்னர்

இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களையே இன்று நாம் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைக்குழியில் காணக்கூடியதாக இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்யைில்,

”இன்று சர்வதேச சமாதான தினம். இந்த தினத்தில் எமது மக்களின் உரிமைக்கான போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம்.

மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியான விசாரணை வேண்டும். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியானது சர்வதேச நியமங்களின் பிரகாரம் அகழப்பட வேண்டும்.

போர்க்குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் சர்வதேச பொறிமுறையின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறான விடயங்களை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் நாட்டில் சமாதானம் அமைதி என்பது எட்டாத ஒன்றாக காணப்படுகிறது. இங்கே ஆட்சி செய்கின்றவர்களுக்கு சமாதானம் என்பது தேவையில்லாத விடயமாக இருக்கின்றது.

இங்குள்ள சில தரப்பினர் இனவாத கருத்துக்களை முன்னிறுத்தி பௌத்த மேலாதிக்க சிந்தனையுடனும் பெரும்பான்மை பேரினவாத சக்திகளின் ஆதரவுடனும் ஆட்சிபீடம் ஏறதுடித்து கொண்டிருக்கின்றார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு தமிழ்மக்களுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வினையும் இனப்பிரச்சினைக்கான தீர்ப்பதற்கான எந்த வழிமுறையினையும், பொறிமுறையினையும் தேடாமல் குறிப்பாக தொடர்ச்சியாக அரசியல் செய்வதற்காக சமாதான முயற்சிகளில் அக்கறையற்றவர்களாக இருக்கின்றார்கள்.

இறுதி போரில் அனைவரும் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்தார்கள். சரணடைந்தவர்களுக்கு பாதுகாப்பு தருகின்றோம், உங்களுக்கு நல்ல வாழ்கைக்கு கொண்டு செல்கின்றோம், நீங்கள் எங்களிடம் சரணடையுங்கள் என்று ஒலிபெருக்கி மூலம் இறுதி போர்க்கால பகுதியில் அறிவித்துவிட்டு சரணடைந்தவர்களை படுமோசமாக கொலை செய்துவிட்டு குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களைதான் நாங்கள் இந்த கொக்குத்தொடுவாயில் காணக்கூடியதாக இருக்கின்றது.

கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி என்பதை விட அது ஒரு போராளிகளின் புதைகுழியாகத்தான் காணக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு சர்வதேச நிபுணர்குழுவினை கொண்டுவந்து அவர்களுக்கு முன்னால்தான் இந்த புதைகுழியினை தோண்ட வேண்டும்.

இங்குள்ளவர்களை கொண்டு பரிசோதிக்கின்ற பட்சத்தில் முடிவினை காணமுடியாது. இந்த அரசாங்கத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லாத தன்மை கடந்த காலங்களில் இருந்து வருகின்றது.

இனிவரும் காலங்களிலும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் எல்லா விடயங்களிலும் சர்வதேச விசாரணையினை ஏற்படுத்தினால்தான் எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் நம்புகின்றோம்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...