மண்ணெண்ணெய் விலை மாற்றம் செய்வது பல வருடங்களாக கட்டாயமாக இருந்தது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நட்டத்திற்கு ஒரு முக்கிய காரணம் மானிய விலையில் விற்பனையாகும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், மீன்பிடி மற்றும் மண்ணெண்ணெய்யை நம்பியுள்ள தோட்டத் துறைகளுக்கும் செலவுகளுக்கு இணையான விலையில், அரசாங்கம் நேரடி பண மானியத்தை வழங்க முன்மொழிந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மண்ணெண்ணெய் ரூ.87.00 க்கு விற்பனை செய்வதன் மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய்க்கு 283.00 ரூபா வரையிலான நட்டத்தைச் சந்தித்து வருவதாக அண்மையில் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment