rtjy 286 scaled
இலங்கைசெய்திகள்

கனடா வாழ் ஈழத் தமிழருவருக்கு யாழ்.ஜனாதிபதி மாளிகை

Share

கனடா வாழ் ஈழத் தமிழருவருக்கு யாழ்.ஜனாதிபதி மாளிகை

காங்கேசன்துறையில் உள்ள ஜனாதிபதி மாளிகை NorthernUni பல்கலைக்கழகமாகவும் தொழில்நுட்ப பூங்காவாகவும் மாற்றப்படவுள்ளது.

கடந்த 16.10.2023 ஆம் திகதி NorthernUni நிறுவுனர் இந்திரகுமார் பத்மநாதன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருவரும் இடையிலான சந்திப்பின்போதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கின் கல்வித்துறை மற்றும் தொழில்வாய்ப்பு மேம்பாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

northernuni ஆனது மானிப்பாயை பூர்வீகமாகக் கொண்ட மற்றும் கனடா வாழ் தமிழ் முதலீட்டாளர் இந்திரகுமார் பத்மநாதனின் நிதி முதலீட்டில் வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு சிறந்த உயர்தரத்திலான கல்வி வாய்ப்பினை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வருடா வருடம் நடைபெறும் க.பொ.த உயர்தர பரீட்சையின் போது சுமார் 22,600 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெறுகிறார்கள்.

இருப்பினும் 4379 பேர் மட்டுமே பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிறார்கள். 18289 மாணவர்கள் தகுதி பெற்றும் அவர்களுக்கான பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத ஒரு குறையை நிவர்த்தி செய்யும் நோக்கிலே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
திருட்டு
இலங்கை

விசேஷ வீட்டில் திருட்டு – யாழில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்.

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில், தாலிக்கொடி...

விகாரை
இலங்கை

விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட வீதி தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு.

தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு எதிராக வலிவடக்கு பிரதேச சபைக்கு எதிராக...

anura kumara
இலங்கை

அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பாக ஜனாதிபதியின் அறிவுறுத்தல்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, “2023ஆம் ஆண்டின் ஊழல்...

anura signature
இலங்கை

ஜனாதிபதி அனுரகுமார அவர்கள் கையெழுத்திட்டால் மரண தண்டனையை நிறைவேற்றலாம்!

பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில்அவர்களுக்கு எதிராக...