24 66314694dd3e2
இலங்கைசெய்திகள்

காங்கேசன்துறைமுக அபிவிருத்தி மொத்த செலவையும் ஏற்கிறது இந்தியா

Share

காங்கேசன்துறைமுக அபிவிருத்தி மொத்த செலவையும் ஏற்கிறது இந்தியா

காங்கேசன் துறைமுக அபிவிருத்திக்கான மொத்த செலவையும் ஏற்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள காங்கேசன் துறைமுகம் அல்லது கே.கே.எஸ். துறைமுகம், மொத்தம் 16 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது ஆகும்.

காங்கேசன் துறைமுகத்தின் வளர்ச்சி மற்றும் புனரமைப்பு பணிகளை செயற்படுத்த இலங்கை அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“இந்த திட்டத்தின் முக்கியத்துத்தை கருத்தில் கொண்டு, காங்கேசன் துறைமுக வளர்ச்சிப் பணிக்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொள்ள இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான திட்ட மதிப்பீடு இந்த திட்டத்திற்கான கடன் தொகையை விட அதிகமாக இருந்ததால், இதை செயற்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், பொது-தனியார் கூட்டு முறையின் கீழ் இந்த திட்டத்தை முடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
202104130023062602 Bribery SECVPF
செய்திகள்இலங்கை

அரச பதவிகளுக்கு கையூட்டு கோரிய முன்னாள் பிரதியமைச்சர் பணியாளர் உட்பட இருவர் கைது!

அரச பதவிகளுக்கு கையூட்டல் கேட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கையூட்டல் ஒழிப்பு...

25 68e368cf08698
செய்திகள்இலங்கை

இலங்கையில் திருமணங்கள் குறைவு: 2024 இல் 12,066 திருமணப் பதிவுகள் சரிவு!

கடந்த ஆண்டில் (2024) நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்து அறுபத்தாறு (12,066) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்...

25 68fb438418a4b
செய்திகள்இலங்கை

“என் உயிருக்கு ஆபத்து”: தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது உயிருக்கு ஆபத்து...