ஒரு சிலர் விடுகின்ற தவறுகள் ஒட்டுமொத்த தமிழ் தேசியத்தின் இருப்பையே சிதைத்து விடும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.
கந்தரோடையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
சில வருடங்களுக்கு முன் திருவடிநிலை பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றபோது படையினர் அந்த காணி தங்களுக்கு விற்கப்பட்டது என்று கூறி காணியுறுதிப் பத்திரத்தை எம்மிடம் காட்டினர். ஆகவே பொதுமக்கள் இவ்விடயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும்.
குறிப்பாக ஒரு சிலர் இராணுவ முகாம்களின் விஸ்தரிப்புகளுக்காகவும் பௌத்த விகாரைகள் அமைப்பதற்காகவும் தங்கள் காணிகளை விற்பனை செய்யும் போது அது தமிழினத்தின் இருப்பையே சிதைத்து விடும்.
இவ்வாறு காணிகளை விற்பதை தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பும் எமக்கு இருப்பதுடன் இவ்வாறு இராணுவ முகாம்களுக்கோ விகாரைகளுக்கோ காணி விற்பனை செய்யும் மனநிலையே பொதுமக்களுக்கு ஏற்படாதவகையில் நாம் செயற்படவேண்டும். – என்றார்.
#SriLankaNews
Leave a comment