20 8
இலங்கைசெய்திகள்

மாம்பழத்துடன் மாவையை சந்தித்த தவராசா அணி

Share

மாம்பழத்துடன் மாவையை சந்தித்த தவராசா அணி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கியுள்ள ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா (KV Thavarasha) தலைமையிலான வேட்பாளர்கள் சிலருக்கும் முன்னாள் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்குமிடையே (Mavai Senathirajah) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் நேற்றையதினம் (11.10.2024) நடைபெற்றுள்ளது.

இதன்போது “மாம்பழம் சின்னத்தில்” போட்டியிடும் வேட்பாளர்கள் மாவை சேனாதிராஜாவிற்கு மாம்பழத்தினை வழங்கி வைத்துள்ளனர்.

குறித்த சந்திப்பில் ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, தமிழரசுக் கட்சியினைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவனபவண், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் தமிழரசுக்கட்சி பொதுநலனுக்கான வீட்டு சின்னமல்ல அது தனிப்பட்ட நபரின் தனியார் நிறுவனம் என சட்டத்தரணி தவராசா (KV. Thavarasha) நேற்றையதினம் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...