image 5f00dc0fad
அரசியல்இலங்கைசெய்திகள்

நீதித்துறைக்கு சுதந்திரம் இல்லை!!

Share

பிரேமநாத் சி.தொலவத்த மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் பாராளுமன்றத்தில் எழுப்பிய சிறப்புரிமைக் கேள்விகள் நீதித்துறையின் சுயாதீனத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கமானது நீதிமன்ற சுயாதீனத்தன்மைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஊடக அறிக்கை மூலம் உறுதியளித்துள்ளது.

நீதிமன்ற சுயாதீனம் என்பது இலங்கை மக்களின் உரிமை எனவும் பிரஜை மற்றும் அரசுக்கு இடையிலான மற்றும் பிரஜைகளுக்கு இடையிலான நீதியை உறுதிப்படுத்துவதற்கு சுதந்திரமான நீதித்துறை அவசியம் என்பதை அனைத்து அரச நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திறைசேரி செயலாளர் மீதான உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி பிரேமநாத் சி.தொலவத்த சிறப்புரிமை கேள்வி எழுப்பினார்.

இது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் பாராளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்தே  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளதுடன், இவ்விடயம் குறித்து எதிர்க்கட்சிகளும் அச்சம் தெரிவித்துள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சிங்கள மகா நாயக்கர்கள்

சமகால அரசாங்கம் பாலின வாழ்க்கையை முறையை ஊக்குவிப்பதாக மகா நாயக்க தேரர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு...

12
இந்தியாசெய்திகள்

விஜயின் திட்டமிட்ட செயல்.. பூதாகரமாகும் குற்றச்சாட்டுக்கள்

கரூரில் விஜய் நேர அட்டவணையை கடைபிடிக்கவில்லை எனவும் பொலிஸ் அதிகாரிகள் கூறியதை மீறி தவறான வழியில்...

11
இலங்கைசெய்திகள்

அநுரவை ஏமாற்றிய மகிந்த

கொழும்பிலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியேறி 2 வாரங்களுக்கும்...

10
இந்தியாசெய்திகள்

கரூரில் இரவோடு இரவாக நிகழ்ந்த மர்மங்கள்.. நடந்தது என்ன..!

கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 40இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்....