சடலமாக மீட்பு
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் போதை ஊசி ஏற்றிய குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

Share

யாழ்ப்பாணத்தில் போதை ஊசி ஏற்றினார் எனக் கருதப்படும் குடும்பஸ்தர் ஒருவர் வாழைத்தோட்டத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்., உரும்பிராய்ப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது 36 வயதுடைய இணுவில் வடக்கைச் சேர்ந்த துரைராசா உசாந்தன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உரும்பிராய் சிவன் வீதியில் உள்ள வாழைத்தோட்டம் ஒன்றில் 4 இளைஞர்கள் சேர்ந்து போதை ஊசி ஏற்றியுள்ளனர். இதன்போது அதிக போதை காரணமாக ஒருவர் சுய நினைவிழந்திருந்த சமயம் சுய நினைவை இழந்து நிலையில் ஒருவர் வீழ்ந்து கிடக்கின்றார் என்று பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற கோப்பாய் பொலிஸார் போதையில் இருந்தவரை பார்த்தபோது உயிரிழந்து காணப்பட்டுள்ளார். இதனால் உயிரிழந்தவருடன் இணைந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்களைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...