யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றன.
இந்த நிகழ்வில், மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனைக் கண்காட்சியும் இடம்பெற்றது.
அத்தோடு பிரதேச செயலக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட சில சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான கௌரவமும் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment