image 9415493080
அரசியல்இலங்கைசெய்திகள்

யாழ் பல்கலை மாணவர்கள் விடுதலை!

Share

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் ந.திவாகரன் மற்றும் செயலாளர் எஸ். பபில்ராஜ் ஆகிய இருவரும், அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அனைத்து வழக்குகளில் இருந்தும் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரிலேயே இவ்விருவரும் முழுமையாக விடுதலைச் செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்,மாவீரர்களின் ஒளிப்படங்கள் மற்றும் தமிழீழ வரைபடம் என்பன கைப்பற்றப்பட்டன.

அதனையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதனை அடுத்து அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு , யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற வழக்கு தவணைகளின் விசாரணைகளின் பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

அவர்கள் இருவரும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலையான இருவரும் தமக்கு சட்ட உதவிகளை வழங்கிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கே. சயந்தன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்னர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...