செய்திகள்இலங்கை

யாழ். பல்கலை 35 ஆவது பட்டமளிப்பு விழா!

University of Jaffnadd
Share

யாழ். பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பட்டமளிப்பு விழாவின் 2ஆவது பகுதி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07 திகதி நிகழ்நிலையினூடாக நடைபெறும்.

இவ்வாறு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா குழுத்தலைவரும், கலைப் பீடாதிபதியுமான கலாநிதி கே.சுதாகர் அறிவித்துள்ளார்.

பட்டமளிப்புவிழா தொடர்பான தீர்மானகளை மேற்கொள்வதற்கென நேற்று இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் விசேட கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

35 ஆவது பட்டமளிப்பு விழாவின் 2ஆவது பகுதி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 7,8,9 ஆம் திகதிகளில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறும்,

நாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கானது தொடர்ந்து நீடிக்குமெனின் ஒக்ரோபர் மாதம் 7 ஆம் திகதி நிகழ்நிலையினூடாக நடத்தப்படும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடத்த சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுமதிக்காத நிலையில் நிகழ்நிலையூடாக பட்டமளிப்பு விழாவை நடத்தி மாணவர்களுக்கான பட்டங்களை உறுதிப்படுத்த பல்கலை நிர்வாகம் முடிவுசெய்திருந்தது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நிகழ்நிலைப் பட்டமளிப்புக்கு தாம் இணங்கவில்லை என பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் துணைவேந்தரின் கவனத்துக்கு கொண்டு சென்ற நிலையில் நேற்று (22) பட்டமளிப்பு விழாக்குழுவின் விசேட கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

கூட்டத்தின் முடிவில் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 7 ஆம் திகதி நிகழ்நிலையில் பட்டமளிப்பை நடத்தி பட்டங்கள் உறுதிசெய்யப்படும்,

தற்போதைய நிலைமை சீரடைந்ததும் மரபுரீதியாக நடைபெறும் பட்டமளிப்பு வைபவத்தை நடத்துவதற்கான திகதியை முன்மொழிவதற்கென மாணவர் பிரதிநிதிகள், பல்கலைக்கழக அலுவலர்களை கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது – என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....