கனடாவிலிருந்து யாழ். வந்த அக்காவால் தங்கைக்கு நேர்ந்த கதி
இலங்கைசெய்திகள்

கனடாவிலிருந்து யாழ். வந்த அக்காவால் தங்கைக்கு நேர்ந்த கதி

Share

கனடாவிலிருந்து யாழ். வந்த அக்காவால் தங்கைக்கு நேர்ந்த கதி

யாழில் தனது தங்க சங்கிலியை ஏமாற்றி களவாடி விட்டதாக தங்கையின் தலைமுடியை அக்கா கத்தரித்துள்ளார்.

தனது தலைமுடியை கத்தரித்த அக்கா மீது தங்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அளவெட்டி பகுதியில் நேற்றைய தினம் (21.07.2023) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கனடாவில் வசிக்கும் பெண்ணொருவர் அளவெட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குடும்பமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்தவர், தனது தாலிக்கொடி மற்றும் தங்க சங்கிலி என்பவற்றை தங்கையிடம் பாதுகாப்பாக வைக்குமாறு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் (21.07.2023) தான் கொடுத்த நகைகளை தருமாறு தங்கையிடம் கோரியுள்ளார்.

எனினும் தங்கை தாலிக்கொடியை மாத்திரமே கையளித்துள்ளனர். சங்கிலி தொடர்பில் கேட்ட போது, சங்கிலி தரவில்லை தாலிக்கொடி மாத்திரமே தந்தாய் என தங்கை கூறியுள்ளார்.

அதனால் அக்கா – தங்கை மத்தியில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு குடும்பி பிடி சண்டையாக மாறியுள்ளது.

அதன் போது தங்கையின் முடியை அக்கா கத்தரித்ததையடுத்து, கத்தரிக்கப்பட்ட தனது தலைமுடியுடன், பொலிஸ் நிலையம் சென்ற தங்கை, தனது அக்கா மீது முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...