யாழ். பொலிஸ் நிலையத்தில் கழுத்தை அறுத்த இளைஞர்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பொலிஸ் நிலையத்தில் கழுத்தை அறுத்த இளைஞர்!

Share

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியைச் சேர்ந்த இளைஞரே கழுத்தில் காயங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

பிடியாணை உத்தரவை நிறைவேற்றும் முகமாக யாழ்ப்பாணம் பொலிஸாரால் இளைஞர் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த இளைஞர் தனது உடமையில் இருந்த பிளேட்டை எடுத்து, தனது கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார் எனக் கூறி பொலிஸாரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....

Lightning
இலங்கை

அம்பாறையில் மின்னல் தாக்கியதில் முற்றாக அழிவடைந்த வீடு.

நேற்று மாலை பெய்த பலத்த மழையின் போது அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில்...

kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...