யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் 24 ஆயிரம் மீற்றர் கணம் கொள்ளளவு கொண்ட சுத்தமான குடிதண்ணீர் வழங்கும் இரண்டு முக்கிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இத் திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஒக்ரோபர் 6ஆம் யாழ்ப்பாணம் வருகை தந்து ஆரம்பித்து வைக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் 60 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் ஒரு திட்டமாக 5 ஆயிரம் குடும்ப பயனாளிகளுக்கு உப்பு நீரை சுத்திகரித்து குடிதண்ணீராக மாற்றும் (SWRO) தொகுதி மூலம் குடிதண்ணீர் வழங்கப்படவுள்ளது.
இதற்கு மேலதிகமாக யாழ்.நகரை மையமாகக் கொண்டு ஒரு லட்சம் மக்களுக்கு பயன்தரும் 284 கிலோமீற்றர் தூரம் கொண்ட மற்றொரு குடிதண்ணீர் திட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் திட்டங்கள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு சுமார் 3 லட்சம் மக்கள் சுத்தமான குடிதண்ணீரை பெற ஏதுவாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment