VideoCapture 20220706 074020
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பல்கலைஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரப் பெருமானின் கும்பாபிஷேகம் இன்று!

Share

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலுள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரப் பெருமானின் புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று 6ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றது.

இதற்கான கிரியைகள் அனைத்தும் கடந்த 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் இடம்பெற்றன.

இன்று புதன்கிழமை காலை யாக பூஜையைத் தொடர்ந்து மகாபூர்ணாகுதி இடம்பெற்று பரமேஸ்வரப் பெருமானுக்கு தீபாராதனை, விசேஷ பூஜை இடம்பெற்று, வேத ஸ்தோத்திர திருமுறை பாராயணங்களுடன் 108 நடன மாணவிகளின் நிருத்தியாஞ்சலியும், கீத வாத்திய உபசாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து அந்தர்பலி, பகிர்பலி என்பன வழங்கப்பட்டதன் பின்னர் பிரதான கும்பங்கள் புறப்பட்டு வீதிப் பிரதட்சிணமாக வந்து காலை 6 மணிமுதல் 7மணி வரையான மிதுன லக்ன சுபமுகூர்த்த வேளையில் ஸ்தூபி அபிஷேகம், ராஜகோபுர கும்பாபிஷேகம், அனைத்து மூர்த்திகளுக்குமான மகாகும்பாபிஷேகம் என்பன இடம்பெற்றன.

VideoCapture 20220706 074007 VideoCapture 20220706 074052 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 12
உலகம்செய்திகள்

கனடா விசா நடைமுறைகளில் மாற்றம்!

கனடாவிலே வெளிநாட்டு விசாவை வழங்குகின்ற நடைமுறைகளிலே ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற இறுக்கம் காரணமாக ஆவணங்களை சமர்ப்பிக்கின்ற தன்மை 50...

10 12
இலங்கைசெய்திகள்

ஜெனீவாவை தவிர்க்க கூடிய அன்றைய ஜே.வி.பியின் தீர்மானம்..!

ஜே.வி.பியின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று ஜெனீவா செல்ல தேவையிருந்திருக்காது என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்....

9 11
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லும் மக்கள் : எழுந்துள்ள விசனம்

தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள் பல்வேறு காரணங்களால் விலகிச் செல்வதாக பிரதி அமைச்சர் நாமல்...

8 12
இலங்கைசெய்திகள்

இந்தியாவில் இருக்கும் சாரா தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

ஈஸ்டர் குண்டு தாக்குதலின் முக்கிய சாட்சியாளர் சாரா.அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்,தற்போது அரசாங்கம் இந்தியாவில் இருக்கும்...