யாழ்ப்பாண மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் இன்றையதினம் இந்திய துணைத் தூதுவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ்ப்பாணம் தீவகப் பகுதிகளில் எல்லை தாண்டிய இந்திய இழுவைப் படகுகளின் வருகை நேற்று மற்றும் நேற்று முன்தினம் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தலைமையிலான மீனவ சங்க பிரதிநிதிகள் இன்று யாழ் இந்திய துணைத் தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதுவராலயத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலின் போது ஏற்கனவே யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் காரணமாக இலங்கை எல்லைக்குள் அத்துமீறிய இந்திய இழுவை மடி படகுகளின் வருகை கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் எழுவைதீவு, அனலைதீவு, நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய தீவு பகுதிகளில் இந்திய படகுகள் இலங்கை எல்லைக்குள் வருவதாகவும் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment