image 6483441 3 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பல்கலையில் உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்பு பட்ட கற்கை நெறி ஆரம்பம்!

Share

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்படும் உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்பு (Bachelor of Science Honors in Physical Education) கற்கைநெறிக்கு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையிலும், விளையாட்டுத்துறை சார் திறமையின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு (Orientation Programme) இன்று (20) புதன்கிழமை இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானபீடத்தின் விளையாட்டு விஞ்ஞானத்துறை தலைவர் கலாநிதி சி.சபா ஆனந் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, முன்னாள் துணைவேந்தரும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினருமான சிரேஷ்ட பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான பொ. பாலசுந்தரம்பிள்ளை, இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடாதிபதி திருமதி தெய்வி தபோதரன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இவர்களுடன், பல்கலைக்கழகத்தின் பதிவாளர், நிதியாளர், நூலகர், மாணவர் நலச்சேவைகள் பணிப்பாளர், மாணவர் நலச்சேவைகள் உதவிப்பதிவாளர் உட்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டு புதுமுக மாணவர்களுக்கு பல்கலைக்கழக நடைமுறைகள் மற்றும் மாணவர் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.

நிகழ்வில் பீடாதிபதிகள், முன்னாள் விளையாட்டு விஞ்ஞானத் துறை இணைப்பாளர்கள், உடற்கல்வி அலகின் பணிப்பாளர் மற்றும் பயிற்றுநர்கள், விரிவுரையாளர்கள், முன்னாள் மாவட்ட விளையாட்டு அதிகாரிகள், விளையாட்டு விஞ்ஞானத் துறையின் உயர் டிப்ளோமா மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

image 6483441 1 image 6483441 2 1 image 6483441 4

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செய்திகள்இலங்கை

தீபாவளிப் பண்டிகைக்காக கொழும்பிலிருந்து பல பகுதிகளுக்கு விசேட பேருந்து சேவை ஆரம்பம்

தீபாவளிப் பண்டிகையையொட்டி கிராமப்புறங்களுக்குப் பயணிகளின் வசதிக்காக விசேட போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின்...

9 16
இலங்கைசெய்திகள்

ஈழத்தமிழர்களின் பூகோளவியல் பிரபலத்துக்கு காரணம்.. நாமல் வெளிப்படை!

தனி தமிழீழ கோரிக்கையே ஈழத் தமிழர்களுக்கு பூகோளவியல் அரசியலில் முக்கியத்துவம் வகிக்க காரணமானது என மொட்டுக்...

8 17
இலங்கைசெய்திகள்

யாழ். தக்சியை பார்த்து வியந்த செவ்வந்தி : வெளிவரும் பல தகவல்கள்!

கணேமுல்ல சஞ்சீவ வழக்கில் பிரதான சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி, நேபாளத்திற்கு சென்று அவரின் உருவத்தை ஒத்த...

7 17
இலங்கைசெய்திகள்

ஒரே மாதத்தில் தோற்றத்தை மாற்றிய செவ்வந்தி.. அதிர்ச்சிக்குள்ளாக்கிய பாதாள உலக பின்னணி!

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் ஒரு மாதத்திற்குள் இஷாரா செவ்வந்தி தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டதாக...