தீபாவளிப் பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்றது.
ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் முதல் நாள் சனக்கூட்டத்தால் யாழ்ப்பாண நகரம் நிரம்பி வழியும் நிலையில், கொரோனாவுக்கு பின்னர் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்படுகின்றது.
புடவைக் கடைகள் மற்றும் ஏனைய கடைகளிலும் பொதுமக்களின் வரவு குறைவாக காணப்படுகின்றது. அத்துடன் அங்காடி வியாபாரமும் எதிர்பார்த்த அளவிற்கு களைகட்டவில்லை.
#SriLankaNews
Leave a comment