அத்தியாவசிய பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த அபராதத் தொகையை ஒரு லட்சமாக அதிகரிக்க வேண்டி சட்டத் திருத்தம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக அத்தியாவசியப் பொருள்களை விற்பனையாளர்கள் அதிகரித்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர் என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
எதிர்வரும் புதன்கிழமை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை சட்டவரைபின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
இந்த விவாதத்தின்போது அபராதத்தொகை தொடர்பான திருத்தம் முன்வைக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment