சிங்கள ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் தமிழர்களும் அழிந்துபோவதை ஏற்கமுடியாது என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழர்களின் தன்னாட்சி உரிமை அங்கீகரிக்கப்படுகின்றபோது, தமிழர்கள் தம்மைச் சக்திவாய்ந்த இனமாக நிறுவிக்காட்டுவர். இலங்கையின் ஆட்சியாளர்களால் தற்போது ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியவில்லை.
தென்னிலங்கை மக்கள், தம் மீது அழுத்தப்படும் பொருண்மிய சுமையால் சீற்றம் கொண்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தென்னிலங்கை ஆட்சியாளர்களின் இயலாமை தற்போது வெளிப்படையாகத் தெரிகின்றது. இவர்களின் திறன் இன்மையால் விளைந்த பொருண்மிய நெருக்கடி தற்போது தமிழர்களையும் கடுமையாக பாதிக்கின்றது
நமக்குரிய சுயநிர்ணய உரிமையை, தன்னாட்சியை, உலகம் அங்கீகரிக்க வேண்டிய காலம் இது. சிங்கள ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் தமிழர்களும் அழிந்து போவதை ஏற்க முடியாது.
புலம்பெயர் உறவுகளோடும், எமக்கு ஆதரவான பன்னாட்டு ஆற்றல்களோடும் சேர்ந்து தமிழர்கள் எம்மால், எம்மை வலுவான திறன் வாய்ந்த சக்தியாக நிறுவ முடியும் – என்றார்.
#SriLankaNews
Leave a comment