Harsha de Silva
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டை மிக மோசமான நிலைக்கு தள்ளியவர் ஜனாதிபதியே!

Share

நாட்டை மிக மோசமான நிலைக்கு தள்ளியவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

மேலும் தெரிவித்துள்ள அவர்,

இலங்கை தொடர்பில் யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையை பார்க்கும்போது நாடு சோமாலியா, சூடான் நிலைக்கு சென்றுவிட்டதை உணர முடிகிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாட்டை கட்டியெழுப்ப புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒரு மாதங்களுக்கு மேலாகியும் நாட்டை கட்டி எழுப்புவதற்கான எந்தவொரு வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை.

கோட்டாபய – ரணில் தலைமையிலான அரசாங்கம் பதவி விலகி, பொதுவான வேலைத் திட்டத்தின் கீழ் இயங்குவதற்கான சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் சர்வகட்சி அரசாங்கம் அடுத்த தேர்தல் வரையில் செயற்பட வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...

world 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கல்லையில் பரபரப்பு: போதையில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள தங்கல்லை, குடவெல்ல பகுதியில் நேற்று (மே 04) மாலை நபர் ஒருவர்...

world 24
செய்திகள்இந்தியா

தமிழகத் தேர்தலில் தவெக சாதனை வெற்றி: மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின்...

world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...