29
இலங்கைசெய்திகள்

பசிலுக்கு எதிரான இரகசிய நகர்வுகள் ஆரம்பம்! விரைவில் சிக்கலாம்

Share

பசிலுக்கு எதிரான இரகசிய நகர்வுகள் ஆரம்பம்! விரைவில் சிக்கலாம்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ச(Basil Rajapaksa) தொடர்பான விசாரணைகள் தற்போது மிகவும் இரகசியமான முறையில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பஷில் ராஜபக்‌சவின் சொத்துக்கள், அவற்றை முதலீடு செய்துள்ள இடங்கள், சேமிப்புகள், வீடு உள்ளிட்ட அசையாச் சொத்துக்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் மிகத் தீவிரமாக தகவல்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் ஒருகட்டமாக பசில் ராஜபக்‌சவுடன் கடந்த காலங்களில் நெருக்கமாக செயற்பட்ட வர்த்தகத் துறையினர், முக்கிய அதிகாரிகள் போன்றோரிடம் அண்மைக்காலமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில் சர்வதேச பிடியாணை பெறக்கூடிய வகையில் மிக விரைவில் பசில் ராஜபக்‌சவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுப்பதற்கான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் சட்ட மா அதிபருடனான சந்திப்பின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த விடயம் குறித்து முக்கியமாக கேட்டறிந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே எந்தவொரு விசாரணைக்காகவும் இலங்கைக்குத் தான் வரப்போவதில்லை என்று பசில் ராஜபக்‌ச தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

Share
தொடர்புடையது
death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...