14 5
இலங்கைசெய்திகள்

பயணிகள் கப்பல் சேவை தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு

Share

பயணிகள் கப்பல் சேவை தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு

காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பாகக் காணப்படுகின்ற முறைப்பாடுகள் மற்றும் திருப்தியின்மை குறித்து ஆராயப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் முறைப்பாடுகள் ஆராயப்பட்டுள்ளன.

இந்தக் கலந்துரையாடலில் ஆளுநர், துறைமுக அதிகார சபையின் பிரதிப் பிரதம செயற்றட்ட முகாமையாளர், காங்கேசன்துறைத் துறைமுக பொறுப்பு அதிகாரி, உதவி பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தவிசாளர், பணிப்பாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அதிகாரிகள் மற்றும் ஓட்டோ உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

காங்கேசன்துறை சுங்கத்தில் இரண்டு கருமபீடங்களே தற்போது உள்ளதால் பயணிகள் வெளியேற நேர தாமதம் ஏற்படுகின்றது.

எனவே, மேலதிகமாக இரண்டு கருமபீடங்களைச் செயற்படுத்துமாறு துறைமுக அதிகார சபை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கடமையாற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் நடத்தைகள் தொடர்பில் உள்ள முறைப்பாடுகளை உரிய வகையில் விசாரணை மேற்கொண்டு பொருத்தமான நடவடிக்கையைத் துரிதமாக மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல் ஆளுநரால் வழங்கப்பட்டது.

சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைய கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்ட பொருட்கள், பழங்கள் போன்றவை தொடர்பில் பயணிகளுக்கு உரிய விழிப்பூட்டல் காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டின துறைமுகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

துறைமுகம் மற்றும் விமான நிலையப் பகுதியில் சேவையில் ஈடுபடும் ஓட்டோ உரிமையாளர்கள் சங்கத்தினரின் கருத்துக்கள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...

Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...