rtjy 118 scaled
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சர்வதேச விசாரணை : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சர்வதேச விசாரணை : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழுவும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் நியமிக்கப்படவுள்ளன என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். இந்த நடவடிக்கை மூலம் மீண்டும் ஏமாற்று நாடகமே அரங்கேற்றப்படும். சர்வதேச விசாரணையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும் என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி மிகவும் முக்கிய ஆவணம்.

சனல் 4 முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும். அதைவிடுத்து இங்கு நியமிக்கப்படவுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நாம் அடியோடு நிராகரிக்கின்றோம்.

அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டை விசாரிக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இதையும் நாம் அடியோடு நிராகரிக்கின்றோம். குற்றவாளிகள் உள்ள இடத்தில் நீதியை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. எனவே, சர்வதேச விசாரணையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும்” என்றார்.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...