இலங்கை
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அப்பட்டமாக பொய் சொல்லும் பொன்சேகா
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அப்பட்டமாக பொய் சொல்லும் பொன்சேகா
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சரத் பொன்சேகாவின் கருத்துக்கள் அப்பட்டமான பொய் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முற்றிலும் ஒருதலைப்பட்சமானது.
சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் ஆயிரம், ஆயிரத்து ஐநூறு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அவர்களைப் பற்றி அவர் பேசுவதில்லை.
இராணுவத் தலைமையகத்தைப் பாதுகாக்க முடியாத இராணுவத் தளபதி அவர்.
அவரது குடல் வெளியே வர குண்டுகள் வீசப்பட்டன. குடல்கள் ஒரு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டன. அவரை வேறு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அப்படிப்பட்டவர் இன்று தேசிய பாதுகாப்பு பற்றி பேசுகிறார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு முற்றிலும் ஒருதலைப்பட்சமானது. அப்போதும் கூறினேன். இன்றும் கூறுகிறேன்.
இதற்கு முன்னர் மகிந்த ராஜபக்சவே இவ்வாறு செய்தார் எனவும் அவரை பாதுகாப்புச் சபைக்கு அழைப்பு விடுக்குமாறும் என்னிடம் கோரிக்கை விடுத்த போதும் நான் அவரை அழைக்கவில்லை என சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பாதுகாப்புச் சபையைக் கூட்டுமாறு என்னிடம் கேட்கப்பட்டதாக கூறும் விடயத்தை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.