யாழிலிருந்து 'சரிகமப' நிகழ்ச்சிக்கு தெரிவான கில்மிசா பற்றி வெளியான சுவாரஸ்ய தகவல்கள்..!
இலங்கைசினிமாசெய்திகள்

யாழிலிருந்து ‘சரிகமப’ நிகழ்ச்சிக்கு தெரிவான கில்மிசா பற்றி வெளியான சுவாரஸ்ய தகவல்கள்..!

Share

யாழிலிருந்து ‘சரிகமப’ நிகழ்ச்சிக்கு தெரிவான கில்மிசா பற்றி வெளியான சுவாரஸ்ய தகவல்கள்..!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான ஷு தமிழில் அண்மையில் ‘சரிகமப’ நிகழ்ச்சிக்கான ஆடிஷன் நடந்தது. இதில் பல போட்டியாளர்கள் தமது குரல் வளத்தை வெளிப்படுத்தி நடுவர்களைக் கவர்ந்ததோடு செலக்ட் ஆனார்கள்.

அவர்கள் வரிசையில் அனைத்து நடுவர்களின் விருப்பத்திற்குரிய பாடகியாக தேர்வாகியவர் தான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிசா. இவரது குரலைக் கேட்டு நடுவர்களே அசந்து போனதோடு தற்பொழுது ட்ரெண்டிங் பாடகியாகவும் கில்மிசா இருக்கின்றார்.

இவர் தற்பொழுது கில்மிசா என்ற யூடியூப் சேனலையும் ஆரம்பித்துள்ளார். இது ஒரு புறம் இருக்க இவர் பற்றிய அறியாத தகவல்களாக பின்வருவனவற்றைக் கூறலாம்.

கில்மிசா யாழ்ப்பாணத்தில் இருப்பதோடு தரம் 8ம் வகுப்பில் கல்வி கற்று வருகின்றாராம். தன்னுடைய மூன்று வயதில் இருந்த பாட ஆரம்பித்த இவர் ஆரம்பத்தில் கோயில்களில் பஜனைப் பாடல்களை மாத்திரமே பாடி வந்தாராம். பின்னர் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடல் மூலம் தான் பாடகியாக மாறினாராம்.

இவர் சாரங்கா இசைக்குழு என்ற குழுவுடன் சேர்ந்து பல இசைக் கச்சேரிகளில் படி இருக்கின்றாராம்.

இது தவிர இந்தியப் பாடகர்களான ரமணியம்மா, அஜய் கிருஷ்ணா, வர்ஷா ஆகியோருடனும் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் பாடி இருக்கின்றாராம். அத்தோடு பல விருதுகளையும் பெற்றிருக்கின்றாரம்.

மேலும் யாழ்ப்பாணத்தில் நடந்த இசைக்கச்சேரிக்கு சரிகமப குழு வந்திருந்தார்களாம். அவர்கள் தான் கில்மிசாவின் குரலைக் கேட்டு சரிகமப நிகழ்ச்சியில் பாடுவதற்கு வாய்ப்பினை வாங்கிக் கொடுத்தார்களாம். கில்மிசாவுக்கு டாக்டர் ஆக வேண்டும் என்பது தான் கனவாம். அவர் பாடகியாகவும் இருந்து கொண்டு டாக்டராகவும் வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்தோடு இவருக்கு நடனம் நடிப்பு எல்லாக் கலையும் தெரியுமாம். கலையுலகில் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக இவருடைய குடும்பமும் இவருக்கு முழு ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...