மொரகொட, சந்தனம் குளம வாவிக்கு அருகே இரண்டு வாகனங்களை இடைமறித்து அதில் பயணம் செய்தவர்கள் கீழே இறக்கி அச்சுறுத்தி 12 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
தங்க நகைகளை கொள்ளையிட்ட நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக மொரகொட பொலிஸார் தெரிவித்தனர்.
முரியாகடவர பாடசாலை விளையாட்டு திடலில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற சங்கீத நிகழ்ச்சிக்கு பிரதான அதிதியாக அழைக்கப்பட்டிருந்த இப்பலோகம பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் நிகழ்ச்சி முடிவடைந்தது மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் இரண்டு வாகனங்களில் திரும்பிச் சென்றுள்ளனர்.
இவர்கள் பயணம் செய்த இரண்டு வாகனங்களையும் நிறுத்தி அதில் பயணம் செய்தவர்களை கீழே இறக்கி தாக்குதல் நடத்தி நகைகளை பறித்துச் சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment