tamilni 202 scaled
இலங்கைசெய்திகள்

தேசிய அடையாள அட்டை தொடர்பில் தகவல்

Share

2022 ஆம் ஆண்டுக்கான ஆட்பதிவு திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட தேசிய அடையாள அட்டைகளில் 04 வீதமானவை பழுதடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில், ஆட்பதிவு திணைக்களம் 6,28,973 தேசிய அடையாள அட்டைகளை அச்சிட்டுள்ளது.

இவற்றில், 22,407 பழுதடைந்துள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தவறான அடையாள அட்டைகள் PVC மற்றும் பாலிகார்பனேட் அட்டைகளில் அச்சிடப்பட்டுள்ளன. இந்த இரண்டு வகையான அட்டைகள் மூலம் அச்சிடப்பட்ட குறைபாடுள்ள அடையாள அட்டைகளின் எண்ணிக்கையை தனித்தனியாக வழங்க திணைக்களம் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, பழுதடைந்த அடையாள அட்டைகள் தொடர்பான எண்ணிக்கையை கணக்கிடுவதற்கான தகவல்கள் தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என தணிக்கை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...