வவுனியா மகாகச்சக்கொடி பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 5 மாணவன் ஒருவனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனைய மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த தொடர் முடக்கநிலை நீக்கப்பட்டு தற்போது ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான பாடசாலைக் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வவுனியா மகாகச்சக்கொடிய பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த மாணவனின் வகுப்பறையில் உள்ள ஏனைய மாணவர்களுக்கும் நாளைய தினம் பி.சி.ஆர் சோதனை முன்னெடுக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
#SriLankaNews
Leave a comment