நாட்டில் தொற்று – 3,619 – சாவு 204
நாட்டில் மேலும் இன்று 3, 619 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டின் மொத்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 47 ஆயிரத்து 749 பேராக உயர்வடைந்துள்ளது.
அதேவேளை கொரோனாத் தொற்றிலிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 78 ஆயிரத்து 168 ஆகும் என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் நேற்றைய தினம் மாத்திரம் மேலும் 204 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தள்ளனர்.
அதன்படி நாட்டில் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,604 ஆக அதிகரித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment