யாழ். மாவட்டத்தில் அண்மைய நாட்களாக அத்துமீறிய இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால், வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரமும், தொழிலும் தொடர்ந்தும் பாதிப்படைந்துள்ளது.
இவ்வாறு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஊடக சந்திப்பு இன்றையதினம் (20) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தீவகப் பகுதிகளில், அத்துமீறிய இரட்டை இழுவை மடிப்படகுகளைப் பயன்படுத்தி, இந்திய மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினர் இந்திய எல்லைக்குள் வந்து கைது செய்கின்றனர் என உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுகின்றனர்.
இந்திய மக்களுக்கு பொய்யான தகவல்களை இந்திய கடற்றொழிலாளர்கள் கூறுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment