வடமராட்சி கடற்பரப்பில் இன்று தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இந்திய இழுவைப் படகுகளால் விரட்டப்பட்டு, ஈயக்குண்டுகளால் எறிந்து படகுகள் தாக்கப்பட்டு, ஒருவர் உயிர் தப்பியதே பெரிய விடயம்.
இவ்வாறு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்;
நேற்று பிடிபட்ட படகில் குஞ்சு மீன்கள் தான் இருந்தது. இந்திய மீனவர்களின் படகுகளைப் பிடித்தமைக்காக எமது கடற்படைக்கு நன்றிகள். என்றும் தொடர்ந்தும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
#SrilankaNews
Leave a comment