முல்லை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது!

500x300 1750181 boat

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த 10 மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கைதான மீனவர்கள் திரிகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை தமிழகம் நாகை மாவட்டம் அக்கரைப்பட்டியிலிருந்து 10 பேர் கொண்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.

அவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அக்கரைப்பேட்டை மீனவர்கள் 10 பேரை கைது செய்தும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்தும் திரிகோணமலை கப்பற்படை முகாமிற்கு அழைத்து வந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

Exit mobile version