1667784466 sri lankan boat 2
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு அனுமதி!!

Share

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்கும் நடைமுறை தொடர்பிலான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விரைவில் புது டெல்லி செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என அமைச்சர் கூறியதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வௌியிட்டிருந்தது.

இலங்கைக்கான விஜயத்தை அண்மையில் மேற்கொண்டிருந்த இந்தியாவின் மத்திய இணை அமைச்சர் முருகனுடன் இரு நாட்டு மீனவர் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...