24 660a9dbbd30e5
இந்தியாஇலங்கைசெய்திகள்

கச்சதீவை கையில் எடுத்திருக்கும் இந்திய அரசியல் பிரச்சாரம்

Share

கச்சதீவை கையில் எடுத்திருக்கும் இந்திய அரசியல் பிரச்சாரம்

2024 என்பது உலகின் போக்கை மாற்றக்கூடிய பல சக்திவாய்ந்த நாடுகளில் தேர்தல் நடைபெறும் ஆண்டாகும்.

உண்மையில் இந்த ஆண்டு உலக சனத்தொகையில் பாதியளவான மக்கள்(04 பில்லியன்) தேர்தல் மூலம் பல உலக நாடுகளின் தலைவர்களை தெரிவு செய்யவுள்ளனர்.

அமெரிக்கா(United States) மற்றும் இந்தியா(India) உட்பட உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கிட்டத்தட்ட 60 நாடுகளில் இந்த ஆண்டு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவில்(Russia) ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று, புடின் தனது ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளார் மேலும், பாகிஸ்தான்(Pakistan) மற்றும் பங்களாதேஷில்(Bangladesh) பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன.

இலங்கையில்(Sri lanka) ஜனாதிபதி தேர்தல் 2024 ஒக்டோபரில் நடைபெற இருப்பதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இன்று சர்வதேசத்தின் கவனம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின்(India) தேர்தல் மீது உள்ளது. இது இலங்கையின் அரசியலை பெரிதும் பாதிக்கிறது.

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு இந்தியாவின் பொதுத்தேர்தல் தேர்தல் காலத்தில் இடம்பெற்றிருந்தது.

அப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) முஸ்லீம் கடும்போக்காளர்களுக்கு எதிராக செயல்படப் போவதாக அறிவித்தார்.

இது இந்திய இந்துக்களை மிகவும் கவர்ந்த தேர்தல் வாக்குறுதியாகும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

ஆனால் அதுபோல இந்தியாவில் தற்போது இந்துத்துவம் மேலோங்கி காணப்படுவதை எம்மால் அறிய முடிகிறது.

இந்திய அரசியலின் பிரதான நாயகனாக 73 வயதான இந்திய பிரதமர் நரேந்திர மோடி விளங்குகிறார்.

முன்னதாக சமூக ஊடகங்களில் அதிகம் பின்தொடர்பவர்களைக் கொண்ட உலகத் தலைவர்களில் மோடி முதல்வராக காணப்படுகிறார்.

இதனடிப்படையில் இந்த ஆண்டும் பொதுத்தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என அரசியல் கருத்துக்களும் காணப்படுகின்றன.

2014 மற்றும் 2019 தேர்தல்களில் பா.ஜ.கவை(PJB) அமோக வெற்றிக்கு அழைத்துச் சென்ற மோடி, தனது இந்துவத்தால் உருவாக்கப்பட்ட பிளவுபடுத்தும் அதிருப்திகளையும் மீறி, மூன்றாவது முறையாக வெல்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

மோடியின் ஆதரவாளர்கள் தங்கள் பிரதமரை ஒரு சிறந்த தொடர்பாளராகவும் தலைவராகவும் பார்க்கிறார்கள். அவரது ஆடைத் தேர்வுகளைப் பொறுத்தவரை, அவை ஆடம்பரமான நவீன உடைகள் முதல் பாரம்பரிய இந்திய உடைகள் வரை காணப்படுகின்றன.

இவை கூட அவரின் அரசியல் நகர்வை பிரதிபலிக்கிறது. காரணம் மக்களை கவரும் வகையில் மாநிலத்திற்கு மாநிலம் தனது ஆடைகளை மாற்றிக்கொள்வதை இந்திய செய்திகள் மூலம் அறியமுடிகிறது.

இந்நிலையில் இந்தியாவானது உலக அரங்கை அடைந்ததற்கு அவரது தலைமையே காரணம் என ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

ஆனால் இலங்கை மீதான மோடியின் பார்வையானது, தொடர்ச்சியான பாரதக் கொள்கையின் கண்ணோட்டத்தில் காணப்படுவதை அறியமுடிகிறது.

காரணம் இந்திய இலங்கையுடன் அண்மைய காலங்களில் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் பேச்சுவார்த்தைகள் மோடி அரசு இலங்கையில் தனது வீயூகத்தை வேரூன்ற முயற்சிக்கிறது என்பது புலப்படுகிறது.

இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் இந்தியாவுக்கு நல்லது என்றாலும், இலங்கைக்கு அது சாதக்கத்தை தருமா என்பது கேள்விக்குறியே? இந்திய வற்புறுத்தலையோ ஆதிக்கத்தையோ இலங்கையின் பெரும்பான்மையின சிங்கள மக்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பா.ஜ.க 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1984இல் இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது.

2019 தேர்தலில் பாஜக 353 இடங்களிலும், காங்கிரஸ் 91 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்திய தேர்தல் ஏழு பகுதிகளாக நடைபெறவுள்ளது. அதற்கு 968 மில்லியன் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இவை அனைத்தும் சேர்ந்து 543 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. ஏப்ரல் 19ஆம் திகதி தேர்தல் ஆரம்பித்து ஜூன் 1ஆம் திகதி முடிவடையும் என நம்பப்படுகிறது. இதில் மோடியே அடுத்த ஆட்சிப்பீடம் ஏறுவார் என நம்பப்படுகிறது.

தமிழ்நாட்டை(Tamilnadu) பொறுத்தவரையில் பா.ஜ.கவுக்கு ஆதரவென்பது ஏனைய மாநிலங்களை பார்க்கிலும் சற்று குறைவாகவே காணப்படுகிறது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் பா.ஜ.க தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை (K. Annamalai )இலங்கையையும் தமிழரையும் மையப்படுத்திய ஒரு தேர்தல் பிரச்சாரத்தை சர்ச்சையாக ஆரம்பித்துள்ளார்.

அவரின் தேர்தல் ஆயுதமாக கச்சதீவை தனது கையில் எடுத்துள்ளார். இதுவே நேற்றைய இந்திய அரசியல் அரங்கத்தில் ஸ்டாலின் தரப்புக்கு எதிரான எதிரொலியாக மாறியது.

இந்திய இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினை உச்சம் பெற்றுள்ள நிலையில் கச்சதீவை மையப்படுத்திய அண்ணாமலையின் விமர்சனமானது தமிழ்நாட்டு அரசியலுக்கு சாதகமான பதிலை வழங்குமா என்ற கேள்வியை தோற்றுவித்துள்ளது.

இதை மையப்படுத்தி இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடையதும் (Nirmala Sitharaman), நரேந்தர மோடியின் குரல்களும் எதிரொலித்திருந்தன.

இந்நிலையில் கச்சதீவு என்பது இலங்கையின் அமைவிடமாக பார்க்கப்பட்டாலும் தற்போது இந்திய அரசியலின் பிரச்சார கருப்பொருளாக மாறியிருப்பது இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு சவாலாக மாறியுள்ளது.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...