24 668aafe8d46c9
இலங்கைசெய்திகள்பொழுதுபோக்கு

இரண்டாவது ரி 20 : இந்தியாவின் அதிரடியில் மண்கவ்வியது சிம்பாப்வே

Share

இரண்டாவது ரி 20 : இந்தியாவின் அதிரடியில் மண்கவ்வியது சிம்பாப்வே

சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ரி 20 போட்டியில் அபிஷேக் சர்மாவின் அதிரடி சதத்தின் மூலம் இந்திய அணி 100 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

ஹராரேயில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 234 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் அறிமுகமான தொடரிலேயே அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார். அவர் 46 பந்துகளில் 8 சிச்கர்கள், 7 பவுண்டரியுடன் சதமடித்து ஆட்டமிழந்தார். அத்துடன் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) 77 ஓட்டங்களையும்,ரிங்கு சிங்( Rinku Singh) 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பின்னர் 235 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கிய சிம்பாப்வே அணி 18.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 134 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Wessly Madhevere அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றதுடன், Luke Jongwe 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் முகேஸ் குமார்(Mukesh Kumar)ஆவேஷ் கான்(Avesh Khan) இருவரும் தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

நேற்றைய(06) தினம் இடம்பெற்ற முதலாவது ரி20 போட்டியில் சிம்பாப்வே 13 ஓட்டங்களால் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ரி 20 தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இரண்டு அணிகளும் சமநிலையில் உள்ளன.

 

Share
தொடர்புடையது
anura kumara dissanayake
இலங்கை

தூர நோக்குடன் வரவு செலவு திட்டம் – ஜனாதிபதி தெரிவிப்பு.

  அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீட்டை வழங்கத்...

yositha
இலங்கை

யோஷிதவை வசமாக சிக்க வைத்த முன்னாள் காதலி!

மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...

லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...