யாழ்ப்பாணத்தின் 3 தீவுகளையும் சீனாவிடமிருந்து பிடுங்கியது இந்தியா!

1 1

யாழ்ப்பாணத்தின் 3 தீவுகளில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலமான மின் உற்பத்தி தொடர்பில் இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்தத் தீவுகளில் சீன அரசின் உதவியுடன் அந்த நாட்டு நிறுவனம் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலமான மின் உற்பத்தி மேற்கொள்வதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இந்தியா தனது பாதுகாப்பை முன்னிறுத்தி இராதந்திர ரீதியில் இலங்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

இந்தநிலையில் இலங்கைக்கான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கலின்போது இந்தியா பல நிபந்தனைகளை விதித்திருந்தது. அதில் வடக்கு, கிழக்கில் இந்திய முதலீட்டுக்கு அனுமதிக்கக் கோரியிருந்தது.
இதற்கு அமைவாக யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளிலும் மின் உற்பத்திக்கான ஒப்பந்தம் இந்தியாவுடன் நேற்றுமுன்தினம் இரவு கைச்சாத்திடப்பட்டுள்ளது.

“பொருளாதார மீட்சி, நமது அபிவிருத்தி பங்குடைமை, பரஸ்பர பாதுகாப்பு, மீனவர்கள் விவகாரம் மற்றும் சர்வதேச ரீதியிலான ஒன்றிணைவு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் முக்கியமான பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்ட நிகழ்வுகளிலும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது” என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடனான சந்திப்பின் பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version