இந்தியாவின் பாதுகாப்புக் கவலை: வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் உறுதி
இந்தியாவின் பாதுகாப்புக் கவலைகளுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் இலங்கையை வேறொரு நாடு பயன்படுத்த விடமாட்டோம் என்று வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளார்.
டில்லியில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பாதுகாப்புக் கவலையைப் பற்றி இந்தியா கவலைப்பட அவசியமில்லை. இந்தியாவின் வளர்ந்து வரும் அந்தஸ்தை நாங்கள் அறிவோம்.
அத்துடன், இந்தியாவின் பாதுகாப்பு விடயத்தில் எந்த மூன்றாம் தரப்பினரும் அல்லது நாடும் இலங்கையை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம்.
எனவே, நேர்மையான கருத்துப் பரிமாற்றத்தின் மூலம், எந்த பிரச்சினையையும் சமாளிக்க முடியும்.
நாங்கள் எந்த நாட்டுடனும் வர்த்தகம் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை எங்களுக்கு ஒரு சிறப்பு உறவு உள்ளது.
சீனாவுடனான எங்கள் உறவைப் பற்றி இந்தியா கவலைப்பட அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன்.
இது சீனாவுடன் மட்டுமல்ல. மேற்கத்திய நாடுகள், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனும் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.