இந்தியாவிலிருந்து, இலங்கைக்கான கோதுமை மாவின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சுக்கு தெரிவித்துள்ளனர்.
கோதுமை மா ஏற்றுமதியை நிறுத்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ள நிலையிலேயே இலங்கைக்கான இறக்குமதியும் நிறுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக உலக நாடுகளுக்கு கோதுமை மா ஏற்றுமதி செய்வதை இந்தியா நிறுத்தியுள்ளது. தமது கோதுமை உற்பத்தியை பாதுகாப்பு இருப்புப் பகுதியாக பராமரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதேவேளை, இலங்கை இந்தியாவில் இருந்து பிரட்தூள்களை இறக்குமதி செய்தது. இந்த நிலையில் இந்தியாவிலிருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பும் இருந்ததாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் தற்போது அந்த வாய்ப்பும் நழுவிப்போயுள்ளது.
#SriLankaNews
Leave a comment