கலாசார மற்றும் மத ரீதியிலான சில வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியாவும் இலங்கையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அந்த ஒற்றுமைகள் பிரதிபலிக்கும் சந்தர்ப்பங்களில் தீபாவளியும் ஒன்று என்றும் அது இன்று முழு உலகமும் கொண்டாடும் பண்டிகையாக மாறியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நேற்று (29) பிற்பகல் கொழும்பு எக்ஸ்பட்ஸ் கலாசார சங்கத்தின் (Colombo Expats Cultural Association) ஏற்பாட்டில் இடம்பெற்ற விசேட தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment