இலங்கைசெய்திகள்

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு!

Share

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்கப்பட்ட  எாிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனை தொடர்ந்து கடந்த வாரமும் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை மாற்றமின்றி தொடர தீர்மானம் எட்டப்பட்டிருந்தது.

அத்துடன் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்ட நாட்களில் பதிவாகும் நுகர்வு உள்ளிட்ட புள்ளிவிபரங்களை ஆராய்ந்த பின்னரே அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு தொடர்ந்து வழங்கப்படுமா என்பது தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானம் எட்டப்படும் எனவும் கடந்த வாரம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மேலும், முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 5 லீட்டரில் இருந்து 8 லீட்டராகவும், மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 4 லீட்டரில் இருந்து 7 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...