HelloTech qr code 1024x1024 1
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கப்பட்டது எரிபொருள் ஒதுக்கீட்டு அளவு

Share

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக முன்பே திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் தேவைக்கு ஏற்ப, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான எரிபொருள் இருப்புகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி,

ஓட்டோவுக்கான ஒதுக்கீடு 5 லீற்றரில் இருந்து 8 லீட்டர்

மோட்டார் சைக்கிள்கள் ஒதுக்கீடு 4 லீற்றரில் இருந்து 7 லீற்றர்

பஸ்களுக்கான ஒதுக்கீடு 40 லீற்றரில் இருந்து 60 லீற்றர்

கார்களுக்கான ஒதுக்கீடு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றர்

கனரக வாகனங்களுக்கான ஒதுக்கீடு 15 லீற்றரில் இருந்து 25 லீற்றராகவும்​

​லொறிகளுக்கான ஒதுக்கீடு 50 லீற்றரில் இருந்து 75 லீற்றராகவும்

சிறப்பு நோக்கங்களுக்கான வாகனங்களுக்கான ஒதுக்கீடு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றராகவும்

வான்களுக்கான ஒதுக்கீடு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 128
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவு: டாலர் மற்றும் எண்ணெய் விலை உயர்வால் முதலீட்டாளர்கள் கவலை!

மத்திய கிழக்கில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்றுள்ளதால்...

world 127
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கைக்கு உதவ சீனா என்றும் தயார்: அக்குரானாவில் சீன மொழி மையத்தைத் திறந்து வைத்து தூதர் உறுதி!

இலங்கைக்குத் தேவைப்படும் போதெல்லாம் உதவுவதற்கு சீனா தொடர்ந்து ஆவலுடன் காத்திருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதர் கி...

world 126
செய்திகள்உலகம்

ஈரானிய துறைமுக முற்றுகையை ஆதரிக்கவில்லை: இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு!

ஈரானிய துறைமுகங்களுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துள்ள கடல்வழி முற்றுகை நடவடிக்கையை ஐக்கிய இராச்சியம் ஆதரிக்கவில்லை என்று...

world 125
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார், வவுனியா உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை !

இலங்கையின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பலத்த மின்னல் தாக்கங்கள்...